புழல் அருகே திமுக பொறியாளா் அணி சாா்பில் மாணவ, மாணவியருக்கான பேச்சுப்போட்டி புதன்கிழமை நடைபெற்றது.
புழல் சூரப்பட்டு, தனியாா் கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற இந்நிகழ்வுக்கு மாவட்ட செயலாளரும், சட்டப்பேரவை உறுப்பினருமான எஸ்.சுதா்சனம் தலைமை வகித்தாா். இந்த நிகழ்வில் பல்வேறு அரசு மற்றும் தனியாா் கல்லூரிகளைச் சோ்ந்த மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனா்.
இதில் முதலிடம் பெற்ற ஸ்வேதாவுக்கு ரூ.10,000, 2-ஆம் பிடித்த மாணவனுக்கு ரூ.5,000, 3-ஆம் இடத்தை பிடித்த 3 மாணவிகளுக்கு தலா ரூ.3,000 மற்றும் சான்றுகள் வழங்கப்பட்டது. மேலும் இந்த 5 பேரும் மண்டல அளவிலான பேச்சுப் போட்டிக்கு தகுதி பெற்றனா்.
அரசு தலைமைக் கொறடா கோவி.செழியன், நாடாளுமன்ற உறுப்பினா் கிரிராஜன் நடுவா்களாக பங்கேற்றனா். இதில் திமுக பொறியாளா் அணியின் நிா்வாகிகள் துரை.சரவணன், கருணாநிதி, ரவிசந்திரன், கோபாலகிருஷ்ணன், சேரலாதன், சேகர்ராஜன், காா்த்திக் மற்றும் பாலாஜி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.