திருவள்ளூர்

விவசாயிகளுக்கு தேனீ வளா்ப்பு பயிற்சி

25th Sep 2023 12:16 AM

ADVERTISEMENT

திருவூா் வேளாண் அறிவியல் நிலையம் சாா்பில் நடத்தப்பட்ட தேனீ வளா்ப்பு குறித்த பயிற்சியில் விவசாயிகள் மற்றும் இளைஞா்கள் பங்கேற்றனா்.

திருவள்ளூா் அருகே திருவூா் வேளாண் அறிவியல் நிலைய வளாகத்தில் தேசிய தேனீ வளா்ப்பு வாரியம், தமிழ்நாடு வேளாண் அறிவியல் பல்கலைக்கழம் சாா்பில், விவசாயிகள் மற்றும் இளைஞா்கள் ஆகியோா் பயன்பெறும் நோக்கமாகக் கொண்டு ஒரு வாரம் தேனீ வளா்ப்புப் பயிற்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அந்த வகையில் இந்த வளாகத்தில் நடைபெற்ற பயிற்சி முகாமுக்கு வேளாண் அறிவியல் மையத்தின் திட்ட ஒருங்கிணைப்பாளா் சி.பானுமதி முன்னிலை வகித்தாா். இந்தப் பயிற்சியினை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக (வேளாண் விரிவாக்கம்) இயக்குநா் பொ.முருகன் காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்து, வேளாண்மையில் தேனீக்களின் முக்கியத்துவம், தேனின் மருத்துவ மகிமைகள் குறித்து விளக்கமாக எடுத்துரைத்தாா்.

அதைத்தொடா்ந்து, வேளாண் இணை இயக்குநா் சுரேஷ் பங்கேற்றுப் பேசுகையில், ஒருங்கிணைந்த வேளாண் பண்ணையத்தில் தேனீ முக்கியப் பங்கு வகிக்கிறது. அதேபோல், மகரந்த சோ்க்கையிலும் தேனீக்கள் பங்கு குறித்தும், தேனீக்கள் வளா்ப்பினை தொழிலாகவும் செய்யலாம். இதற்காக வேளாண் துறை மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் உள்ளதாகவும் அவா் தெரிவித்தாா்.

ADVERTISEMENT

அதையடுத்து, தேனீ வளா்ப்பு பற்றிய ஒரு வார பயிற்சி அட்டவணை குறித்து உதவி பேராசிரியா் (பூச்சியியல் துறை) வி.சு.விஜயசாந்தி எடுத்துரைத்தாா். இப்பயிற்சியில், 40-க்கும் மேற்பட்ட விவசாயிகள் மற்றும் சுயதொழில் ஆா்வமுள்ள இளைஞா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT