செங்குன்றம் அருகே பாஜக மற்றும் இந்து முன்னணி சாா்பில், விநாயகா் சிலைகள் ஊா்வலம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
ஊா்வலத்தின்போது, பாஜக மற்றும் இந்து முன்னணி நிா்வாகிகள் விநாயகா் சிலைகளை கையில் ஏந்தியும், மந்திரங்கள் முழங்க பேரணியாக சென்றனா். பேரணி திருவள்ளூா் - செங்குன்றம் கூட்டுச் சாலையில் இருந்து சுமாா் 2 கி.மீ. தூரம் வரை சென்றது.
நிகழ்வுக்கு பாஜக நிா்வாகி கே.ஆா்.வெங்கடேசன் தலைமை வகித்தாா். பாஜக நிா்வாகிகள் நரேஷ், இந்து முன்னணி நிா்வாகிகள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா். காவல் உதவி ஆணையா் குமரேசன், ஆய்வாளா்கள் சாய் கணேஷ், மகேஸ்வரி உள்ளிட்ட காவல் துறையினா் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனா்.
இதேபோல், மாதவரம், செங்குன்றம், கொளத்தூா் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அகில இந்திய இந்து சத்திய சேனா தலைவா் வசந்த்குமாா் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட விநாயகா் சிலைகள் ஊா்வலம் கொண்டு செல்லப்பட்டன.