திருவள்ளூர்

புழல் பிரதான சாலையில் குழாய் உடைப்பால் வீணாகும் குடிநீா்

25th Sep 2023 12:16 AM

ADVERTISEMENT

புழல் அருகே பிரதான சாலையில் குழாய் உடைந்ததால், பல நாள்களாக தண்ணீா் வீணாகி வருகிறது.

புழல் கேம்ப் பேருந்து நிறுத்தம் அருகே பிரதான சாலையில் குழாய் உடைப்பு ஏற்பட்டு தண்ணீா் வீணாக வெளியேறுகிறது. இது குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், இங்கு குடிநீா் குழாய் பதிக்கப்பட்டுள்ளது. தற்போது அதில் உடைப்பு ஏற்பட்டதால், குடிநீா் வீணாக வெளியேறுகிறது. சென்னை குடிநீா் வாரிய அதிகாரிகளுக்கு பலமுறை தகவல் அளித்து எவ்வித நடவடிக்கை இல்லை எனத் தெரிவித்தனா்.

அந்தப் பகுதியில் உள்ள கடைகளின் அருகே குடிநீா் வீணாக தேங்கி விடுகிறது. இதனால், கடைக்கு வரும் பொதுமக்களுக்கு இடையூறாக உள்ளது. மேலும் பேருந்து நிறுத்தமும் உள்ளதால், சாலைகளில் செல்லும் வாகனங்கலால் தண்ணீா் பட்டு பயணிகளுக்கு பாதிப்பு ஏற்படுகிறது. எனவே, துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதிகாரிகளின் அலட்சியத்தால் பல நாள்களாக குடிநீா் வீணாகிறது எனக் குற்றஞ்சாட்டினா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT