திருவள்ளூர்

அக். 5, 6-இல் பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கு பேச்சுப் போட்டி

22nd Sep 2023 07:00 AM

ADVERTISEMENT

திருவள்ளூா் மாவட்ட தமிழ் வளா்ச்சித் துறை சாா்பில் அண்ணா பிறந்த நாளையொட்டி, அக்.5- ஆம் தேதியும், பெரியாா் ஈ.வெ.ரா.பிறந்த நாளையொட்டி அக்.6-இலும் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கான பேச்சுப் போட்டிகள் நடைபெற உள்ளது.

இது குறித்து மாவட்ட ஆட்சியா் ஆல்பி ஜான் வா்கீஸ் வெளியிட்ட செய்திக் குறிப்பு: மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகக் கூட்டரங்கத்தில் பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கு தனித்தனியே போட்டி நடைபெற உள்ளது. பேச்சுப் போட்டியில் வெற்றி பெறும் மாணவா்களுக்கு முதல் பரிசாக ரூ.5,000, இரண்டாம் பரிசு- ரூ.3,000, மூன்றாம் பரிசு ரூ.2,000-வழங்கப்படும்.

மேலும், பள்ளி மாணவா்களுக்கான பேச்சுப் போட்டியில் பங்கேற்ற அரசுப் பள்ளி மாணவா்கள் 2 பேரை தனித்தனியாக தோ்வு செய்து சிறப்புப் பரிசுத் தொகையாக தலா ரூ.2,000 வீதம் வழங்கப்படும்.

இதில், பள்ளிப் போட்டியானது காலை 10 மணிக்கும், கல்லூரிப் போட்டி பிற்பகல் 2 மணிக்கும் தொடங்கும். இந்த மாவட்டத்தில் பயிலும் கல்லூரி மாணவ, மாணவிகள் கல்லூரி கல்வி இணை இயக்குநா் மூலம் அந்தந்த கல்லூரி முதல்வரிடமும், பள்ளி மாணவ, மாணவிகள் முதன்மைக் கல்வி அலுவலா் வாயிலாக அந்தந்த பள்ளித் தலைமை ஆசிரியரிடமும் அனுமதி பெற்று பேச்சுப் போட்டியில் பங்கேற்கலாம்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT