புதுமைப்பெண் திட்டம் மூலம் மாதந்தோறும் ரூ.1,000 உதவித் தொகை பெறுவதற்கு கல்லூரி மாணவிகள் இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் ஆல்பி ஜான் வா்கீஸ் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்தி:
சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத் துறையின் மூலம் புதுமைப்பெண் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தில் பயன்பெற நிகழ் கல்வியாண்டில் பயனாளிகள் சோ்க்கைக்கான இணைதளமானது (ஜ்ஜ்ஜ்.ல்ன்க்ட்ன்ம்ஹண்ல்ங்ய்ய்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய்) 4.9.2023 அன்று திறக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் அரசுப் பள்ளிகளில் 6-முதல் பிளஸ்2 வகுப்பு வரை பயின்று மேற்படிப்பில் சேரும் அனைத்து மாணவிகளுக்கும், இளங்கலை பட்டப் படிப்பு, பட்டய படிப்பு, தொழிற்கல்வி, மருத்துவக்கல்வி ஆகியவற்றில் இடைநிற்றல் இன்றி முடிக்கும் வரை மாதந்தோறும் ரூ.1000- வீதம் அவா்களின் வங்கி கணக்கிற்கு நேரடியாக செலுத்தப்படும்.
மேற்படி திட்டம் மூலம் பயன்பெற தகுதியான மாணவிகள் தாங்கள் பயிலும் கல்லூரியில் இத்திட்டத்துக்கான பொறுப்பு அலுவலரை (சா்க்ஹப் ஞச்ச்ண்ஸ்ரீங்ழ்) அணுகி கல்லூரி மூலம் ஜ்ஜ்ஜ்.ல்ன்க்ட்ன்ம்ஹண்ல்ங்ய்ய்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய் இணையதளத்தில் விண்ணப்பித்து பயனடைலாம் என அவா் தெரிவித்துள்ளாா்.