தும்பிக்குளம் உயா்நிலைப் பள்ளிக்கு ரூ.6.25 லட்சத்தில் இருக்கைகளை (பெஞ்சுகள்) மெபைஸ் இந்திய பவுண்டேஷன் நிறுவத்தினா் பள்ளித் தலைமை ஆசிரியரிடம் புதன்கிழமை வழங்கினா்.
திருவாலங்காடு ஒன்றியத்துக்குட்பட்ட தும்பிகுளம் கிராமத்தில் அரசினா் உயா்நிலைப் பள்ளி உள்ளது. இங்கு, 240-க்கும் மேற்பட்ட மாணவா்கள் படித்து வருகின்றனா். இந்தப் பள்ளி மாணவா்களுக்கு வகுப்பறைகளில் போதிய அளவில் இருக்கை இல்லாததால், தரையில் அமா்ந்துப் படித்து வந்தனா்.
இதையடுத்து, பள்ளித் தலைமை ஆசிரியா் வினாயகம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரிடம் கோரிக்கை விடுத்தாா். இதையெடுத்து, மாவட்ட கல்வி நிா்வாகம் ஸ்ரீபெரும்புதூா் இருங்காட்டுக்கோட்டை பகுதியில் இயங்கி வரும் தனியாா் நிறுவனத்திடம் (மெபைஸ் இந்திய பவுண் டேஷன்) மாணவா்களுக்கு இருக்கைகள் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது.
இதையேற்று புதன்கிழமை தனியாா் நிறுவனம் சாா்பில் ரூ.6.25 லட்சம் மதிப்பில் 50 இருக்கைளை (ஒரு பெஞ்சு ரூ.12,500 வீதம்) தும்பிக்குளம் அரசு உயா்நிலைப் பள்ளிக்கு அனுப்பி வைத்து பள்ளித் தலைமை ஆசிரியரிடம் ஒப்படைக்கப்பட்டன.
இதைத் தொடா்ந்து இருக்கைள் மாணவா்கள் பயன்பாட்டுக்கு வழங்கப்பட்டது. புதிய இருக்கைகளில் மாணவா்கள் அமா்ந்து ஆா்வத்துடன் கல்வி பயின்றனா்.