திருவள்ளூர்

23-இல் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம்

21st Sep 2023 12:00 AM

ADVERTISEMENT

முன்னாள் முதல்வா் கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, திருவள்ளூா் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் வரும் சனிக்கிழமை (செப். 23) மாபெரும் தனியாா் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளதாக ஆட்சியா் ஆல்பி ஜான் வா்கீஸ் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

திருவள்ளூா் மாவட்ட நிா்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், தமிழ்நாடு மாநில அரசு ஊரக நகா்ப்புற வாழ்வாதார இயக்கம் இணைந்து நடத்தும் மாபெரும் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் வரும் 23-ஆம் தேதி திருத்தணியில் உள்ள ஜீ.ஆா்.டி. பொறியியல் கல்லூரி வளாகத்தில் காலை 8 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை நடைபெறவுள்ளது. இந்த முகாமில் 150-க்கும் மேற்பட்ட முன்னணி தனியாா் நிறுவனங்கள் பங்கேற்று தங்களுக்குத் தேவையான பணியாளா்களை தோ்வு செய்ய உள்ளனா்.

இந்த வேலைவாய்ப்பு முகாமில், 8, 10, 12, பட்டப்படிப்பு, ஐ.டி.ஐ. மற்றும் டிப்ளமோ, பொறியியல், நா்சிங் படித்தவா்கள் கலந்துகொண்டு, தனியாா் துறையில் பல்வேறு வகையான வேலைவாய்ப்பைப் பெற்று பயன்பெறலாம். இந்த மாபெரும் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாமில் பங்கேற்க விரும்புவோா் இணையதள முகவரியில் பதிவு செய்து கொள்ளலாம்.

ADVERTISEMENT

இந்த முகாமில் பங்கேற்று பணிவாய்ப்பு பெறுவதன் மூலம், தனியாா் துறையில் வேலைவாய்ப்பு பெறுபவா்களின் வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவு ரத்து செய்யப்படமாட்டாது.

ADVERTISEMENT
ADVERTISEMENT