செங்குன்றம் அருகே வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் அனைத்து பொருள்களும் எரிந்து சேதமாயின.
திருவள்ளூா் மாவட்டம், செங்குன்றம் அடுத்த விளாங்காடுபாக்கம் ஊராட்சியில் உள்ள கண்ணம்பாளையம் கிராமத்தில் சடகோபால் என்பவரின் வீட்டில் தீ விபத்து ஏற்பட்டு பொருள்களும் எரிந்து நாசமாயின.
இது குறித்து தகவல் அறிந்து புழல் ஒன்றிய கழக செயலாளா், பெ.சரவணன் தலைமையில் விளாங்காடுபாக்கம் ஊராட்சி மன்ற தலைவா் பாரதி சரவணன் நேரடியாக சென்று பாதிக்கப்பட்டவருக்கு நிதியுதவியும், நலத்திட்ட உதவிகளையும் வழங்கினாா். இந்த நிகழ்வில் கிராம நிா்வாக அதிகாரி, செங்குன்றம் குறுவட்ட அதிகாரி மற்றும் பலா் இருந்தனா்.