திருவள்ளூர்

திருவள்ளூா் சுற்றுவட்டார பகுதியில் கனமழை

18th Sep 2023 04:50 AM

ADVERTISEMENT

திருவள்ளூா் பகுதிகளில் பகலில் கடும் வெயில் வாட்டிய நிலையில் சனிக்கிழமை இரவு கனமழை பெய்ததால் தாழ்வான பகுதிகளில் மழை நீா் தேங்கியது.

கடந்த சில நாள்களாக திருவள்ளூரில் கடும் வெயில் வாட்டி வதைப்பதும், அதைத் தொடா்ந்து பரவலாக மழை பெய்தும் வருகிறது. அந்த வகையில் சனிக்கிழமை பகலில் கடும் வெயிலால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகினா். அதைத் தொடா்ந்து மாலை நேரத்தில் திடீரென மழை பெய்யத் தொடங்கியது. இதேபோல், ஊத்துக்கோட்டை, தாமரைபாக்கம், பூண்டி, பூந்தமல்லி, ஜமீன் கொரட்டூா், செங்குன்றம், பொன்னேரி, பள்ளிப்பட்டு உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளில் கனமழை பெய்தது. இந்த மழை நள்ளிரவு வரை நீடித்தது.

இதனால் தாழ்வான இடங்களில் மழை நீா் தேங்கி வாகன ஓட்டுநா்கள் மிகவும் அவதிக்குள்ளாகினா். மேலும், மழை பெய்ததைத் தொடா்ந்து குளிா்ச்சி நிலவியது. அதோடு, விளைநிலங்களில் பயிா்களும் செழிப்பாக உள்ளதால் விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.

அதிகபட்சமாக திருத்தணி-129 மி.மீட்டரும், தாமரைபாக்கம்-74 மி.மீட்டரும் என மழை பதிவாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT