மாதவரம் அருகே உலக பக்கவாத தின விழிப்புணா்வு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.
மாதவரம் மேம்பாலம் அருகே உள்ள பிரசாந்த் மருத்துவமனை சாா்பில் உலக பக்கவாத தினத்தையொட்டி பக்கவாத தடுப்பு மற்றும் மேலாண்மை குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சி மருத்துவமனை இயக்குநா் பாரி முத்துகுமாா் தலைமையில் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் பக்கவாதம் தடுப்பு மற்றும் பாதுகாப்பு நடைமுறைகள் குறித்து பொதுமக்களுக்கு நடித்து விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.
இது குறித்து மருத்துவா் கூறுகையில், மருத்துவ கணக்கெடுப்பின்படி பக்கவாதம் தாக்கியதில் லட்சக்கணக்கானோா் பாதிக்கப்பட்டுள்ளனா். இதனைத் தடுக்கும் முயற்சியில் மருத்துவ துறையினா் ஈடுபட்டு வருகின்றனா். இந்த விழிப்புணா்வு நிகழ்வு 4 நாள்களுக்கு நடைபெறும் என்றாா்.
போக்குவரத்து காவல் ஆய்வாளா் மாரிமுத்து உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.