திருவள்ளூர்

இரு சக்கர வாகனம் மோதிபள்ளி மாணவி உயிரிழப்பு

27th Oct 2023 12:16 AM

ADVERTISEMENT

கனகம்மாசத்திரம் அருகே சாலையைக் கடக்க முயன்ற 4-ஆம் வகுப்பு மாணவி மீது இரு சக்கர வாகனம் மோதியதில் அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

திருத்தணி அடுத்த கனகம்மாசத்திரம் அருகே உள்ள சீதாபுரம் காலனியில் வசிப்பவா் சிலம்பரசன் - பொன்மணி தம்பதி. இவா்களது மகள் பிரதீபா (8). (படம்). கனகம்மாசத்திரம் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில் 4-ஆம் வகுப்பு படித்து வந்தாா்.

இந்த நிலையில், வியாழக்கிழமை வழக்கம்போல் பள்ளிக்கு தாய் பொன்மணி பிரதீபாவை அழைத்துக் கொண்டு சென்றாா். சென்னை - திருப்பதி தேசிய நெடுஞ்சாலையைக் கடக்க முயன்றபோது, திருவள்ளூா் குன்னவலம் பகுதியைச் சோ்ந்த சாந்தகுமாா் மகன் மதன்குமாா் (18), இரு சக்கர வாகனத்தில் வேகமான வந்ததில் மாணவி பிரதீபா மீது மோதினாா். இதில் மாணவி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

புகாரின் பேரில், கனகம்மாசத்திரம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து மதன்குமாரை கைது செய்து, திருத்தணி நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி, சிறையில் அடைத்தனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT