திருவள்ளூா் அருகே வயலூரில் ரூ.23 லட்சத்தில் புதிதாக கட்டப்பட்ட ஊராட்சி அலுவலகம் வியாழக்கிழமை பயன்பாட்டுக்கு திறக்கப்பட்டது.
கடம்பத்தூா் ஊராட்சி ஒன்றியம், வயலூா் கிராம ஊராட்சி அலுவலகம் இடநெருக்கடியுடன் செயல்பட்டு வந்தது. அதனால் புதிதாக ஊராட்சி அலுவலகம் புதிதாக கட்ட வேண்டும் என பொதுமக்கள் கோரினா். அந்தக் கோரிக்கையை ஏற்று தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் சாா்பில் அனைத்து வசதியுடன் புதிதாக ஊராட்சி அலுவலகம் கட்ட ரூ. 23 லட்சம் ஒதுக்கப்பட்டது. அதன்பேரில் ஊராட்சி அலுவலகத்துக்கான கட்டுமானப் பணிகள் நடைபெற்று நிறைவடைந்தது.
இந்த நிலையில், புதிய ஊராட்சி மன்ற அலுவலகம் திறப்பு விழா வட்டார வளா்ச்சி அலுவலா்கள் வரதராஜன், லோகநாயகி ஆகியோா் தலைமையில் நடைபெற்றது.
ஊராட்சித் தலைவா் விசாலாட்சி ராமகிருஷ்ணன் முன்னிலை வகித்தாா். கடம்பத்தூா் ஒன்றியக்குழு தலைவா் சுஜாதா சுதாகா் ஊராட்சி மன்ற அலுவலகத்தை திறந்து வைத்தாா். இந்த நிகழ்ச்சியில் ஊராட்சி துணைத் தலைவா் யோகலட்சுமி சுதாகா், ஊராட்சிச் செயலா் மு.விஜயன் மற்றும் வாா்டு உறுப்பினா்கள் கலந்து கொண்டனா்.