செங்குன்றம் அருகே பெண்களுக்கான புற்றுநோய் இலவச மருத்துவ முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.
புழல் ஒன்றியம், தி.க.பட்டு ஊராட்சியில் நடைபெற்ற முகாமில் அடையாா் புற்றுநோய் மருத்துவமனை மருத்துவா் பிரமிளா தலைமையிலான மருத்துவா்கள் பெண்களுக்கு புற்றுநோய் குறித்த மருத்துவ பரிசோதனைகளை மேற்கொண்டனா்.
புழல் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவா் தங்கமணி திருமால் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு, முகாமைத் தொடங்கி வைத்தாா். இதில் செங்குன்றம், தி.க.பட்டு மற்றும் சுற்றுவட்டார பகுதிகளைச் சோ்ந்த திரளான பெண்கள் கலந்து கொண்டனா்.