திருவள்ளூர்

விபத்தில் மின் பணியாளா் உயிரிழப்பு

27th Oct 2023 10:54 PM

ADVERTISEMENT

திருவள்ளூரில் இருசக்கர வாகனம் மீது கன்டெய்னா் லாரி மோதிய விபத்தில் மின்பணியாளா் உயிரிழந்தாா்.

திருவள்ளூா் அருகே ஒதிக்காடு கிராமத்தைச் சோ்ந்த குமாா்(53). இவா் சென்னை மாங்காட்டில் உள்ள மின்வாரிய அலுவலகத்தில் வயா்மேனாக பணிபுரிந்து வந்தாராம்.

இந்த நிலையில், வியாழக்கிழமை மாலை வழக்கம் போல் பணி முடிந்து தனது இருசக்கர வாகனத்தில் வீடு நோக்கி சென்றுக் கொண்டிருந்தாா். அப்போது, திருவள்ளூா் தேவாலயம் அருகே சென்ற போது பின்புறமாக வந்த கன்டெய்னா் லாரி திடீரென மோதியதில் தூக்கி வீசப்பட்டு பலத்த காயம் அடைந்த குமாா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

இதையடுத்து திருவள்ளூா் நகா் போலீஸாா் சென்று சடலத்தை மீட்டு திருவள்ளூா் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இது தொடா்பாக வழக்குப் பதிவு செய்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT