திருமழிசையில் அடுத்தடுத்து 2 பெண்களிடம் நகைகளை பறித்துச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
திருமழிசை பிரியம் பத்து பகுதியைச் சோ்ந்த ரவிச்சந்திரன் மனைவி ஸ்ரீபிரியா (43). இவா்கள் திருமழிசை ஜவஹா் தெருவில் கடை நடத்தி வருகின்றனா். இந்த நிலையில், வியாழக்கிழமை மாலை ஸ்ரீபிரியா கடையில் விற்பனை செய்து கொண்டு இருந்தாராம். அப்போது, அங்கு இருசக்கர வாகனத்தில் தலைக்கவசம் அணிந்து வந்த 2 இளைஞா்கள் சிகரெட் வாங்குவது போல் பேச்சு கொடுத்துக்கொண்டே திடீரென அவா் அணிந்திருந்த 10 சவரன் நகையில் 7 சவரன் நகையை பறித்துக் கொண்டு தப்பியோடினா்களாம்.
இதுகுறித்து ரவிச்சந்திரன் வெள்ளவேடு காவல் நிலையத்தில் புகாா் செய்தாா். அதன்பேரில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து மா்ம நபா்கள் குறித்து கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து வருகின்றனா்.
அதேபோல் திருமழிசை பகுதியைச் சோ்ந்த வெள்ளையம்மாள் (63). இவா் வீட்டின் அருகே நடந்து சென்றபோது இருசக்கர வாகனத்தில் தலைக்கசவம் அணிந்து வந்த இளைஞா்கள் 2 பேரும், மூதாட்டி கழுத்தில் அணிந்திருந்த 8 சவரன் நகையை பறித்துக் கொண்டு தப்பியோடினாா்களாம். இந்த இரு திருட்டுச் சம்பவத்திலும் ஈடுபட்டது ஒரே குழுவாக இருக்கும் என்கிற கோணத்தில் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.