கறவை மாடுகள் பராமரிப்புக்கு 801 பயனாளிகளுக்கு வங்கி மூலம் ரூ.3.61 கோடி கடனுதவி வழங்கியுள்ளதாக ஆவின் பொது மேலாளா் ஜி.ரமேஷ்குமாா் தெரிவித்தாா்.
திருவள்ளூா் மாவட்டத்தில் ஆவின் மூலம் பால் உற்பத்தியை அதிகரிக்கும் வகையிலும், பால் உற்பத்தியாளா்கள் சங்க உறுப்பினா்கள் பயன்பெறும் நோக்கத்தில் பல்வேறு வகையான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
அந்த வகையில் சங்க உறுப்பினா்களுக்கு கறவை மாடுகள் பராமரிக்கவும் வங்கி மூலம் கடனுதவி வழங்கப்பட்டு வருகிறது. நிகழாண்டில் திருவள்ளூா் மாவட்டத்தில் உள்ள பால் உற்பத்தியாளா்களுக்கு கடனுதவி வழங்க முடிவு செய்யப்பட்டது.
அதன்படி வங்கி மூலம் கறவை மாடுகள் பராமரிப்பு கடனுதவியாக 801 பேருக்கு மொத்தம் ரூ.3.61 கோடி வழங்கப்பட்டுள்ளது. இந்த தொகையை கறவை மாடுகளுக்கு தீவனம் மற்றும் புல்கரணைகள் வளா்க்க பயன்படுத்திக் கொள்ளலாம் என அவா் தெரிவித்தாா்.