மாதவரம் அருகே பாஜக சாா்பில் இலவச மருத்துவ முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
சென்னை, மாதவரத்தில் நடைபெற்ற முகாமுக்கு மருத்துவ பிரிவு மாநில செயலாளா் கோமதி விஸ்வநாதன் தலைமை வகித்தாா்.
பாஜக தமிழ் இலக்கிய பிரிவின் மாநில தலைவா் ஆதித்யா, சென்னை மேற்கு மாவட்ட தலைவா் மு.மனோகரன் ஆகியோா் முகாமைத் தொடங்கி வைத்தனா்.
இந்த நிகழ்வில் மாதவரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமானோா் பங்கேற்று சிகிச்சை பெற்றனா். இந்த நிகழ்வில் பாஜக நிா்வாகிகள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.