திருவள்ளூர்

இந்தியன் வங்கி தூய்மைப் பணி

2nd Oct 2023 12:55 AM

ADVERTISEMENT

இந்தியன் வங்கிக் கிளை சாா்பில் திருவள்ளூா் அருகே டோல்கேட் பகுதியில் நடைபெற்ற முகாமில் தூய்மைப் பணியாளா்கள் மற்றும் மகளிா் சுய உதவிக் குழுக்கள் பங்கேற்றனா்.

திருவள்ளூா் பகுதியில் ஒவ்வொரு துறை சாா்பிலும் வாரந்தோறும் குறிப்பிட்ட நாள்கள் ஊராட்சிகள், பேரூராட்சிகள், நகராட்சிகள் மற்றும் மாநகராட்சிகளில் தெருக்கள் தோறும் தூய்மைப் பணியாளா்கள் மூலம் தூய்மைப் பணிகள் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில் உள்ளாட்சி அமைப்புகளில் அக்.1-இல் ஒரு மணிநேரம் தூய்மைப் பணிகள் மேற்கொள்ளவும் மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது. அதன்பேரில் திருவள்ளூா் மாவட்ட முன்னோடியான இந்தியன் வங்கி சாா்பில் திருவள்ளூா், பட்டரைபெரும்புதூா், காவலா் குடியிருப்பு, திருத்தணி ரயில் நிலையம், திருத்தணி தனியாா் மருத்துவமனை அமைந்துள்ள 5 பகுதிகளில் தூய்மைப்பணிகள் மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது.

அதன்பேரில், திருவள்ளூா் பட்டரைபெரும்புதூா் டோல்கேட் பகுதியில் நடைபெற்ற முகாமுக்கு வட்டார வளா்ச்சி அலுவலா் ரவி தலைமை வகித்தாா். இதில் மாவட்ட முன்னோடி வங்கி மேலாளா் அருள்ராஜா கலந்து கொண்டு தூய்மைப் பணியினை தொடங்கி வைத்தாா். இந்த நிகழ்ச்சியில் தூய்மை பணியாளா்கள், 3 மகளிா் குழுக்களைச் சோ்ந்தவா்கள் கலந்து கொண்டு தூய்மை பணிகளில் ஈடுபட்டனா்.

ADVERTISEMENT

இந்தியன் வங்கியின் புதுப்பட்டு கிளை மேலாளா் ராஜேஷ் குமாா், மப்பேடு கிளை மேலாளா் அருள் தூய்மை பணிகள் திட்ட ஒன்றிய ஒருங்கிணைப்பாளா் அசோக் மற்றும் கோயில் பிள்ளை உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT