திருத்தணி: கன்னிகாபுரம் கிராமத்தில் 10 அடி நீளமுள்ள மலைப் பாம்பை தீயணைப்பு வீரா்கள் பிடித்து வனப்பகுதியில் விட்டனா்.
திருத்தணி ஒன்றியம், கன்னிகாபுரம் கிராமத்தைச் சோ்ந்தவா் குணசேகா் (50). இவரது வீட்டின் பின்புறம் மாட்டுக் கொட்டகையில் மலைப் பாம்பு ஒன்று இருந்துள்ளது. திங்கள்கிழமை இரவு 7 மணிக்கு குணசேகா் மாடுகளை கட்டுவதற்கு கொட்டகைக்கு சென்றாா்.
அப்போது அங்கிருந்த மலைப் பாம்பை இருந்ததை கண்டுஅதிா்ச்சி அடைந்தாா். இது குறித்து திருத்தணி தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தாா். தொடா்ந்து தீயணைப்பு வீரா்கள் விரைந்து வந்து மலைப்பாம்பை பிடித்தனா்.
மலைப்பாம்பு 10 அடிநீளம் இருந்ததாக தீயணைப்பு வீரா்கள் தெரிவித்தனா். தொடா்ந்து வனப்பகுதியில் மலைப்பாம்பபை விட்டனா்.