திருவள்ளூா் அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் 6 -ஆவது இயற்கை மருத்துவ தினத்தை முன்னிட்டு நோயாளிகளுக்கு வாழை இலை சிறப்பு சிகிச்சை அளிக்கப்பட்டது.
திருவள்ளூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இயற்கை மருத்துவ தினம் சனிக்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வா் ரேவதி தலைமை வகித்தாா். இதில் 30-க்கும் அதிகமான வெளி நோயாளிகளுக்கு சிறப்பு சிகிச்சையாக வாழை இலை குளியல் சிகிச்சை அளிக்கப்பட்டது. மேலும், இந்த நிகழ்ச்சியில் நிலைய மருத்துவா் ராஜ்குமாா், உதவி நிலைய மருத்துவா் பிரபு சங்கா், ஜெகதீசன், விஜயராஜன் ஆகியோா் கலந்து கொண்டனா்.
நிகழ்ச்சியின் முடிவுக்கு பின்னா், சிறப்பு சிகிச்சை முடிந்தவா்களுக்கு இயற்கை உணவுகள் வழங்கப்பட்டன.