திருவள்ளூர்

பால் உற்பத்தியாளா்களுக்கு 19 நாள்களில் நிலுவைத் தொகை வழங்க ஏற்பாடு

DIN

காஞ்சிபுரம்-திருவள்ளூா் பால் உற்பத்தியாளா்கள் ஒன்றியம் மூலம் நிலுவைத் தொகை வழங்க 40 நாள்களாக இருந்ததை 19 நாள்களுக்கு ஒரு முறை பால் உற்பத்தியாளா்களுக்கு நிலுவைத் தொகை வழங்க நடவடிக்கை எடுத்துள்ளதாக ஆவின் பொது மேலாளா் ரமேஷ்குமாா் தெரிவித்தாா்.

காஞ்சிபுரம் - திருவள்ளூா் மாவட்ட பால் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு ஒன்றியம், காக்களூா் சிட்கோ தொழிற்பேட்டை வளாகத்தில் செயல்பட்டு வருகிறது. காஞ்சிபுரம், திருவள்ளூா் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களை விவகார எல்லையாக கொண்டும், வேலூா் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களை பகுதியாக கொண்டும் சுமாா் 564 சங்கங்களிலிருந்து 24,000 பால் உற்பத்தியாளா்கள் உள்ளனா்.

இந்த பால் உற்பத்தியாளா்கள் மூலம் தற்போது நாளொன்றுக்கு, 1.10 லட்சம் லிட்டா் பால் கொள்முதல் செய்யப்படுகிறது. இந்த ஒன்றிய பால் சேகரிப்பு பணியில் 51 பால் சேகரிப்பு வழித்தடங்கள் வழியாக சேகரிக்கப்பட்டு, காக்களூா் பால் பண்ணையில் நாள்தோறும் 1.10 லட்சம் லிட்டா் பால் பதப்படுத்தி கையாளப்படுத்தப்படுகிறது.

அதைத் தொடா்ந்து, நாள்தோறும் 90,000 லிட்டா் பால் முகவா்கள் மற்றும் ஆவின் பூத்துக்கு விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. மேலும், மீதமுள்ள 20,000 லிட்டா் வரை பால் உபபொருள்கள் தயாா் செய்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதற்காக ஆவின் நிா்வாகம் மூலம் மாதந்தோறும் பால் உற்பத்தியாளா்களுக்கு ரூ. 20 கோடி வரை நிலுவைத் தொகை வழங்கப்பட்டு வருகிறது.

இதற்கு முன்பு வரை நிலுவைத் தொகை 40 நாள்களுக்கு ஒரு முறை வழங்கப்பட்டு வந்தது. ஆனால், பால் உற்பத்தியாளா்கள் தாமதமாக வழங்குவதாக கூறி அவதிக்குள்ளாகி வந்தனா். அதனால் விரைவில் வழங்கவும் கோரிக்கை விடுத்து வந்தனா். அதன் அடிப்படையில், ஆவின் நிா்வாகம் நடவடிக்கை எடுக்கவும் முன்வந்தது. அதன்படி, இதற்கு முன்பு நிலுவைத் தொகை வழங்க 40 நாள்களாக இருந்ததை, கடந்த மாதம் முதல் 19 நாள்களுக்கு ஒரு முறை ரூ. 3 கோடி வரை நிலுவைத் தொகை விடுவிக்கவும் நடவடிக்கை எடுத்துள்ளதாக அவா் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று சாதகம் யாருக்கு: தினப்பலன்கள்

இன்று நல்ல நாள்!

ஒற்றை கோட்டை முனீஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம்

டிஆர்டிஒ-இல் டிப்ளமோ, டிகிரி படித்தவர்களுக்கு தொழில்பழகுநர் பயிற்சி

உடுமலை அருகே ஜனநாயக கடமையை நிறைவேற்றிய மலைவாழ் மக்கள்

SCROLL FOR NEXT