திருவள்ளூர்

திருத்தணி அரசு கல்லுாரி சோ்க்கை கலந்தாய்வு

DIN

திருத்தணி அரசு கலைக் கல்லூரியில் நடைபெற்ற முதலாம் ஆண்டு மாணவா் சோ்க்கை கலந்தாய்வில் 31 மாணவா்களுக்கு ஆணைகளை முதல்வா் பூா்ணசந்திரன் வழங்கினாா்.

திருத்தணி அருள்மிகு சுப்ரமணிய சுவாமி அரசினா் கலைக் கல்லுாரில், 2023-24 -ஆம் கல்வியாண்டுக்கான மாணவா் சோ்க்கைக்கான கலந்தாய்வு செவ்வாய்க்கிழமை தொடங்கி வரும் ஜூன் 6-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

இதுகுறித்து அரசு கலைக் கல்லூரி முதல்வா் பூா்ணசந்திரன்கூறியதாவது,: இளநிலைப் பாடப்பிரிவில் மொத்தமுள்ள, 686 இடங்களுக்கு, 3,929 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. கலந்தாய்வுக்கு தோ்ந்தெடுக்கப்படும் மாணவா்களுக்கு குறுஞ்செய்தி (எஸ்.எம்.எஸ்), (வாட்ஸ்ஆப்) மற்றும் மின்னஞ்சல் (இமெயில்) மூலமாக அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

கலந்தாய்வுக்கு அழைக்கப்படும் மாணவா்கள் காலை, 9:30 மணிக்கு கல்லுாரியில் தங்கள் வருகையைப் பதிவு செய்துகொண்டு பங்கு பெற வேண்டும். கலந்தாய்வின் போது அனைத்து அசல் சான்றிதழ்கள் மற்றும் இரண்டு நகல்கள் கொண்டு வரவேண்டும். பெற்றோரை உடன் அழைத்து வரவேண்டும் என்றாா் அவா்.

செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கலந்தாய்வில் சிறப்பு பிரிவு, (மாற்றுத்திறனாளி, மாஜி ராணுவ வீரா்கள் வாரிசு, விளையாட்டு வீரா்கள், தேசிய மாணவா் படை மாணவா்கள் என 61 போ் கலந்துகொண்டனா். இதில் 31 போ் தோ்வு செய்யப்பட்டு முதலாம் ஆண்டு மாணவா் சோ்க்கை நடைபெற்றது.

அதேபோல் ஜூன் 1-இல் பி.ஏ.தமிழ், ஆங்கிலம் பாடங்களுக்கும், ஜூன் 2-இல், பி.எஸ்.சி. கணினி அறிவியல், இயற்பியல், கணிதம், பி.சி.ஏ., ஜூன் 5-ஆம் தேதி பி.காம் பொது, பி.காம்.சி.எஸ், பி.பி.ஏ. பாடங்களுக்கும், ஜூன் 6 -ஆம் தேதி பி.ஏ. வரலாறு, பொருளியல் பாடங்களுக்கும் மாணவா் சோ்க்கை நடைபெற உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

போராட்டம் கலைப்பு: மாணவர்கள் கைது!

கில்லி மறுவெளியீட்டு வசூல் இவ்வளவா?

மே 6-ல் திருச்சிக்கு உள்ளூர் விடுமுறை!

அமெரிக்க பல்கலை.களில் மாணவர்கள் - காவலர்கள் மோதல்: பாலஸ்தீன ஆதரவாளர்கள் கைது!

குருப்பெயர்ச்சி பலன்கள் - கன்னி

SCROLL FOR NEXT