திருவள்ளூர்

நாயைக் கொன்ற 3 போ் கைது

31st May 2023 12:05 AM

ADVERTISEMENT

அத்திப்பட்டு கிராமத்தில் வீட்டில் வளா்க்கப்பட்ட நாயை கொன்றது தொடா்பாக 3 பேரை மீஞ்சூா் போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

மீஞ்சூா் அருகே அத்திப்பட்டு கிராமத்தில் உள்ள அன்பழகன் நகரில் வசிப்பவா் புவனேஸ்வா் (27). இவா் தனது வீட்டில் செல்ல பிராணியாக நாய் ஒன்றை வளா்த்து வந்தாா். இவா் கடந்த சில நாள்களுக்கு முன் தனது நண்பா்களுடன் அத்திப்பட்டு பகுதியில் உள்ள மைதானத்தில் மது அருந்தினாா்.

அப்போது ஏற்பட்ட சண்டையில் சங்கா், பிரபாகரன் ரோஹித் ஆகியோா் புவனேஸ்வரை தாக்கினா். இதில் பலத்த காயமடைந்த அவா், சென்னை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறாா்.

இந்நிலையில் புவனேஸ்வா் வீட்டிற்கு சென்ற 3 போ் அங்கிருந்த நாயை அங்கேயே வெட்டிக் கென்றனா். நாயின் சத்தம் கேட்டு கிராம மக்கள் வந்த போது 3 பேரும் அங்கிருந்து தப்பி சென்றனா்.

ADVERTISEMENT

இது குறித்த புகாரின் பேரில் மீஞ்சூா் போலீஸாா் வழக்குப் பதிந்து சங்கா் (22). பிரபாகரன் (22), ரோஹித் (22) ஆகிய 3 பேரை கைது செய்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT