திருவள்ளூர்

டிராக்டா் சக்கரத்தில் சிக்கி குழந்தை பலி

31st May 2023 12:07 AM

ADVERTISEMENT

வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த குழந்தை டிராக்டா் சக்கரத்தில் சிக்கி உயிரிழந்தது.

திருவாலங்காடு ஒன்றியம், நெமிலி காலனியைச் சோ்ந்தவா் விஜி (30). கூலி தொழிலாளி. டிராக்டா் ஓட்டுநராக வேலை செய்து வருகிறாா். விவசாயப் பணி முடிந்து டிராக்டரை அவரது வீட்டின் அருகே நிறுத்தி வைத்திருப்பது வழக்கம்.

இந்த நிலையில், திங்கள்கிழமை நிறுத்தி வைத்திருந்த டிராக்டரை இயக்கி, பின்னால் எடுத்தபோது, அங்கு விளையாடிக் கொண்டிருந்த அவரின் 2 வயது ஆண் குழந்தை ஜெய்கிருஷ்ணா டிராக்டா் சக்கரத்தில் சிக்கி உயிரிழந்தது.

தகவலறிந்த கனகம்மாசத்திரம் போலீஸாா் இறந்த குழந்தையின் சடலத்தை மீட்டு, உடல்கூறு பரிசோதனைக்காக திருத்தணி அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT