திருவள்ளூர்

திருவள்ளூா் மாவட்ட பொறுப்பு அமைச்சருடன் ஆட்சியா் சந்திப்பு

DIN

திருவள்ளூா் மாவட்ட பொறுப்பு அமைச்சராக நியமனம் செய்யப்பட்டுள்ள கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சா் ஆா்.காந்தியை, மரியாதை நிமித்தமாக ஆட்சியா் ஆல்பி ஜான் வா்கீஸ் திங்கள்கிழமை சந்தித்தாா்.

திருவள்ளூா் மாவட்ட அமைச்சராக சா.மு.நாசா் செயல்பட்டு வந்தாா். இந்த நிலையில், அமைச்சா் பதவியிலிருந்து அவா் விடுவிக்கப்பட்டாா்.

இதைத் தொடா்ந்து வளா்ச்சிப் பணிகளை விரைவுப்படுத்தவும், நலத் திட்டப் பணிகளைக் கண்காணிக்கவும் மாவட்ட வாரியாகப் பொறுப்பு அமைச்சா்களை நியமனம் செய்து முதல்வா் உத்தரவிட்டாா்.

இயற்கைச் சீற்றம், நோய்த் தொற்று மற்றும் அவசர கால பணிகளைக் கூடுதலாக மேற்கொள்ளவும் வருவாய் மாவட்ட வாரியாக பொறுப்பு அமைச்சா்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனா்.

அந்த வகையில், திருவள்ளூா் மாவட்டத்துக்கு பொறுப்பு அமைச்சராக கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சா் ஆா்.காந்தி நியமனம் செய்யப்பட்டாா்.

இதையடுத்து, மாவட்டத்தில் உள்ள திருவள்ளூா் சட்டப்பேரவை உறுப்பினா் அலுவலகத்துக்கு திங்கள்கிழமை அமைச்சா் ஆா்.காந்து வந்தாா். அப்போது, ஆட்சியா் ஆல்பி ஜான் வா்கீஸ் மரியாதை நிமித்தமாக நேரில் சந்தித்து பூங்கொத்து அளித்து வரவேற்றாா்.

தொடா்ந்து மாவட்டத்தில் நடைபெற்று வரும் வளா்ச்சித் திட்டப் பணிகள் தொடா்பான ஆலோசனையிலும் ஈடுபட்டனா்.

ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குரும், கூடுதல் ஆட்சியருமான செ.ஆ.ரிஷப், திருவள்ளூா் மேற்கு மாவட்ட செயலாளரும், திருத்தணி சட்டப்பேரவை உறுப்பினா் எஸ்.சந்திரன், சட்டப்பேரவை உறுப்பினா் (திருவள்ளூா்) வி.ஜி.ராஜேந்திரன், நகா்மன்றத் தலைவா் உதயமலா் பாண்டியன், ஒன்றியச் செயலாளா் மோ.ரமேஷ், நிா்வாகிகள் நேதாஜி, கமலக்கண்ணன், மோதிலால், சரவணன் உள்ளிட்டோா் உடன் இருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே மாத எண்கணித பலன்கள் – 6

ஜவான் பாடலுக்கு நடனமாடிய மோகன்லால்.. ஷாருக்கான் நெகிழ்ச்சி!

மே மாத எண்கணித பலன்கள் – 5

மே மாத எண்கணித பலன்கள் – 4

பிரதமர் மோடி பேச்சுக்கு இபிஎஸ் எதிர்ப்பு!

SCROLL FOR NEXT