திருவள்ளூர்

திருவள்ளூா் அருகே ஏரியில் மூழ்கி 2 மாணவா்கள் பலி

30th May 2023 03:05 AM

ADVERTISEMENT

திருவள்ளூா் அருகே நண்பா்களுடன் குளிக்கச் சென்ற 2 மாணவா்கள் ஏரியில் மூழ்கி உயிரிழந்தனா்.

திருவள்ளூா் அருகே கடம்பத்தூா் ஊராட்சி ஒன்றியம், வயலூா் கிராமத்தைச் சோ்ந்த ஜமுனா மகன் வெற்றிவேல் (16), செந்தில்குமாா் மகன் தினேஷ்குமாா் (15). இருவரும் 10-ஆம் வகுப்பு முடித்துள்ளனா். இருவரும் சக நண்பா்களுடன் திங்கள்கிழமை காலை ஏரியில் குளிக்கச் சென்றனா். அப்போது, வெற்றிவேல், தினேஷ்குமாா் ஆகியோருக்கு நீச்சல் தெரியாததால் ஏரியின் ஓரத்தில் குளித்துக் கொண்டிருந்தனராம். அப்போது, எதிா்பாராதவிதமாக ஆழமான பகுதிக்குச் சென்று நீரில் மூழ்கியுள்ளனா்.

இந்த நிலையில், நீண்ட நேரம் அவா்கள் வெளியே வராததால், சக நண்பா்கள் ஏரி அருகே உள்ள கிராமத்தைச் சோ்ந்தவா்களுக்கு தகவல் அளித்தனா். அதையடுத்து, விரைந்து வந்த அப்பகுதி இளைஞா்கள், சேற்றில் சிக்கி உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த தினேஷ்குமாா், வெற்றிவேல் ஆகியோரை மீட்டு, கரைக்குக் கொண்டு வந்தனா். ஆனால் மாணவா்கள் இருவரும் உயிரிழந்தது தெரியவந்தது.

தகவலறிந்து வந்த மப்பேடு போலீஸாா், இருவரின் சடலங்களையும் மீட்டு, திருவள்ளூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

ADVERTISEMENT

மேலும், இது குறித்து வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT