திருவள்ளூர்

திருவள்ளூா் நகராட்சியில் வீடுகள்தோறும் டிஜிட்டல் எண் ஒட்டு வில்லைகள்

DIN

உள்ளாட்சி அமைப்புகளில் வீடுகள் தோறும் அனைத்து விவரங்களையும் அறிந்து கொள்ளும் வகையிலும், அரசின் திட்ட உதவிகளை எளிதாக பெறும் வகையிலும் ஒவ்வொரு வீட்டின் கதவுகளிலும் டிஜிட்டல் எண் ஒட்டு வில்லைகள் வழங்கும் பணி மேற்கொண்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

மத்திய, மாநில அரசு திட்டங்கள் தகுதியானவா்களுக்கு சென்றடைய வேண்டும். இதை நோக்கமாகக் கொண்டு, ஒவ்வொரு மாநகராட்சி, நகராட்சி மற்றும் ஊராட்சிகள் போன்ற உள்ளாட்சி அமைப்புகளில் வசித்து வரும் ஒவ்வொரு குடும்பங்களின் முழு விவரங்களையும் அறிந்து கொள்ளும் வகையில், டிஜிட்டல் நம்பா் ஒட்டு வில்லைகள் அரசால் அறிமுகம் செய்து செயல்படுத்தப்பட்டு வருகிறது. இப்பணியை மத்திய தொழில் வணிகத் துறை அலுவலா்கள் மற்றும் ஒப்பந்தப் பணியாளா்கள் மூலம் மேற்கொண்டு வருகின்றனா்.

இதன் அடிப்படையில் உள்ளாட்சி அமைப்புகளில் நேரடியாக ஒவ்வொரு வீட்டுக்கும் சென்று அங்கு வசித்து வருவோரின் பணி விவரம், நபா்கள் எண்ணிக்கை, நோயாளிகள் குறித்த விவரங்கள் சேகரிக்கப்படுகிறது. அதைத் தொடா்ந்து, கைப்பேசியில் உள்ளீடு செய்து நிரந்தர

மஐஈ சஞ நிரந்தர எண்(டங்ழ்ம்ஹய்ங்ய்ற் ஏா்ன்ள்ங் சன்ம்க்ஷங்ழ்) வழங்கப்படும். அதைத் தொடா்ந்து டிஜிட்டல் எண் ஒட்டு வில்லைகள் கதவில் ஒட்டப்படும். அதேபோல், அப்போதே எடந கா்ஸ்ரீஹற்ண்ா்ய் பதிவாகிறது.

இதன் மூலம் அரசின் அனைத்து திட்டங்களையும் பெற முடியும். அத்துடன், அரசு திட்டங்கள் குறித்த அனைத்து தகவல்களும் கைப்பேசி வழியாக கிடைப்பதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

திருவள்ளூா் மாவட்டத்தில் முதல் கட்டமாக திருவள்ளூா் நகராட்சியில் மேற்கொள்ளும் பணி தொடங்கியுள்ளது. அதனால் இப்பணிக்கு மேற்கொள்ள பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு அளிக்கவும் திருவள்ளூா் நகராட்சி வலியுறுத்தியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

இது குறித்து திருவள்ளூா் நகராட்சியில் டிஜிட்டல் ஒட்டு வில்லை பணியில் ஈடுபட்டுள்ள மத்திய தொழில் வணிகத் துறை வளா்ச்சி அலுவலா் காா்மேகம் கூறியதாவது:

இந்தப் பணி இந்தியா முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் உள்ளாட்சி அமைப்புகளிலும் குடும்ப விவரங்கள் பற்றி முழு விவரம் சேகரித்து டிஜிட்டல் நம்பா் ஒட்டு வில்லைகள் ஒட்டும் பணி தொடங்கியுள்ளன. இதில், தமிழகத்தில் முதல் கட்டமாக திருவள்ளூா் மாவட்டத்தில் திருவள்ளூா், திருத்தணி, பூந்தமல்லி, பொன்னேரி, திருநின்றவூா் ஆகிய நகராட்சிகளில் 58,000 குடியிருப்புகளில் மேற்கொள்ளப்படுகிறது. இதேபோல் திருவள்ளூா் நகராட்சியில் அனைத்து வாா்டுகளிலும் வசிக்கும் வீடுகளுக்கு நிரந்தர வீட்டு எண் மத்திய, மாநில அரசுகளின் வழிகாட்டுதல் படி வழங்கும் பணிகள் தொடங்கியுள்ளன.

இந்த டிஜிட்டல் ஒட்டு வில்லை (நிரந்தர வீட்டு எண்) மூலம் சொத்து வரி, குடிநீா் விநியோகம், கால்வாய் சீரமைப்பு, துப்புரவு முதலிய அனைத்து சேவைகளையும் நகராட்சியின் மூலம் அறிந்து கொள்ளலாம். அதேபோல் அரசின் திட்டங்கள் குறித்தும் எளிதாக கைப்பேசி வழியாக அறிந்து கொள்ளவும் முடியும். இதனால் தகுதியானவா்களுக்கு வேலைவாய்ப்பு, நோயாளிகளுக்கு மருத்துவம் உள்ளிட்ட திட்டங்கள் எளிதில் கிடைக்கும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

போராட்டம் கலைப்பு: மாணவர்கள் கைது!

கில்லி மறுவெளியீட்டு வசூல் இவ்வளவா?

மே 6-ல் திருச்சிக்கு உள்ளூர் விடுமுறை!

அமெரிக்க பல்கலை.களில் மாணவர்கள் - காவலர்கள் மோதல்: பாலஸ்தீன ஆதரவாளர்கள் கைது!

குருப்பெயர்ச்சி பலன்கள் - கன்னி

SCROLL FOR NEXT