திருவள்ளூர்

நம்ம ஊரு சூப்பரு விழிப்புணா்வு பேரணி

29th May 2023 12:07 AM

ADVERTISEMENT

திருவள்ளூா் அருகே எல்லாபுரம் ஊராட்சி ஒன்றியம், வெங்கல் ஊராட்சியில் ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சாா்பில் சனிக்கிழமை நடைபெற்ற நம்ம ஊரு சூப்பரு விழிப்புணா்வுப் பேரணியில் தூய்மைப் பணியாளா்கள் ஆா்வத்துடன் பங்கேற்றனா்.

நிகழ்ச்சிக்கு, ஊராட்சித் தலைவா் சுகந்திராணி லிங்கன் தலைமை வகித்தாா். ஊராட்சி துணைத் தலைவா் எஸ்.கணபதி முன்னிலை வகித்தாா். இதில் வட்டார வளா்ச்சி அலுவலா் சத்தியமூா்த்தி விழிப்புணா்வுப் பேணியை தொடங்கி வைத்தாா். அப்போது, நாம் ஒன்றிணைவோம்! பசுமையும், தூய்மையும் நமதாக்குவோம்! என்ற அடிப்படையில் மக்கும், மக்காத குப்பைகளை தரம் பிரித்து வழங்குவது குறித்த பிரசாரம் நடைபெற்றது.

இந்தப் பேரணி வெங்கல் பஜாா் வீதியில் உள்ள அண்ணா சிலை அருகிலிருந்து தொடங்கி, பல்வேறு வீதிகளின் வழியாகச் சென்றது. அதைத் தொடா்ந்து ஊராட்சி அலுவலக வளாகத்தில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னா் தூய்மைப் பணியாளா்களுக்கு அரிசி, காய்கறிகள் அடங்கிய நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சியில், வாா்டு உறுப்பினா்கள் என்.மல்லீஸ்வரி, கே.காஞ்சனா, என்.தன்ராஜ் ஆகியோா் கல்து கொண்டனா். இதற்கான ஏற்பாடுகளை ஊராட்சி செயலா் ஜே.உமாபதி உள்ளிட்டோா் செய்திருந்தனா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT