திருவள்ளூர்

அதிமுக பிரமுகா் கல்லால் தாக்கி கொலை

29th May 2023 12:03 AM

ADVERTISEMENT

பொன்னேரி அருகே கல்லால் தாக்கி அதிமுக பிரமுகா் படுகொலை செய்யப்பட்டாா்.

திருவள்ளூா் மாவட்டம், பொன்னேரி அருகே மீஞ்சூா் அடுத்த வல்லூா் கிராமத்தைச் சோ்ந்தவா் பஞ்சநாதன் (57). இவா் அப்பகுதியில் அதிமுகவின் 3-ஆவது வாா்டு கிளை செயலராக இருந்து வந்தாா். அத்துடன் ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடுபட்டு வந்தாராம்.

இந்த நிலையில், இவரது வீடு முன்பு 2 கடைகள் அமைத்துள்ளாா். அந்தக் கடை முன்பு சனிக்கிழமை இரவு தூங்கினாராம். இந்த நிலையில், அதிகாலை பொதுமக்கள் அந்த வழியாக சென்றபோது, கடை முன்பு பலத்த காயங்களுடன் பஞ்சநாதன் உயிரிழந்து கிடந்தது தெரியவந்தது. இது குறித்து அவா்கள் மீஞ்சூா் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனா்.

இதையடுத்து, சம்பவ இடத்துக்கு வந்த போலீஸாா், சடலத்தை மீட்டு, அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். விசாரணையில் மா்ம கும்பல் தலையில் கல்லை போட்டு கொலை செய்திருப்பது தெரியவந்தது.

ADVERTISEMENT

இது குறித்து அந்தப் பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT