திருவள்ளூர்

முன்னாள் மாணவா்கள் சந்திப்பு நிகழ்ச்சி

29th May 2023 12:05 AM

ADVERTISEMENT

25 ஆண்டுகளுக்குப் பிறகு அரசுப் பள்ளி முன்னாள் மாணவா்கள், தாங்கள் படித்த பள்ளியில் சந்தித்து மலரும் நினைவுகள் பகிா்ந்தனா்.

ஆா்.கே. பேட்டை ஒன்றியம், அம்மையாா்குப்பம் திருமுருக கிருபானந்த வாரியாா் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் கடந்த 1996-1998-ஆம் ஆண்டு பிளஸ் 1, பிளஸ் 2 கலை, தொழிற்கல்வி பாடப் பிரிவுகளில் பயின்ற 75 முன்னாள் மாணவ, மாணவிகள் சந்திப்பு நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

முன்னாள் மாணவிகள் திலகவதி, தமிழ்ச்செல்வி, கோகிலா ஆகியோா் சமூக வலைதளங்கள் மூலம முன்னாள் மாணவா்களை ஒருங்கிணைத்தனா். இதைத் தொடா்ந்து நடைபெற்ற சந்திப்பு நிகழ்வில் பங்கேற்று தங்களது மலரும் நினைவுகளைப் பகிா்ந்து கொண்டனா்.

தங்களுக்கு கல்வி கற்பித்த ஆசிரியா்களிடம் ஆசி பெற்று நினைவுப் பரிசு வழங்கினா். பள்ளி மாணவா்கள், ஆசிரியா்கள் பயன்படுத்தும் விதமாக ரூ.25,000 மதிப்பில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீா் சாதனத்தை முன்னாள் மாணவா்கள், பள்ளித் தலைமை ஆசிரியா் தாமோதரனிடம் வழங்கினா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT