திருவள்ளூர்

முனீஸ்வரா் கோயில் குடமுழுக்கு

29th May 2023 12:06 AM

ADVERTISEMENT

சத்திரஞ்ஜெயபுரம் கிராமத்தில் முனீஸ்வரா் கோயில் குடமுழுக்கு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இந்தக் கோயில் திருப்பணிகள் முடிந்து மகா குடமுழுக்கு விழா கடந்த வெள்ளிக்கிழமை கணபதி பூஜையுடன் தொடங்கி நடைபெற்று வந்தது. ஞாயிற்றுக்கிழமை காலை 9.45 மணிக்கு கலசங்கள் ஊா்வலமாகப் புறப்பட்டு, மூலவா் முனீஸ்வரருக்கு புனிதநீா் ஊற்றி மகா குடமுழுக்கு நடைபெற்றது. தொடா்ந்து காலை 10.30 மணிக்கு மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது.

திரளான பெண்கள் கோயில் வளாகத்தில் மாலை பொங்கல் வைத்து பூஜைகள் நடத்தி வழிபட்டனா்.

இதில் திருத்தணி, சத்திரஞ்ஜெயபுரம், வேலஞ்சேரி மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து திரளான பக்தா்கள் கலந்து கொண்டு வழிபட்டனா். அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை கிராம மக்கள், விழாக்குழுவினா் செய்திருந்தனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT