திருவள்ளூர்

மாற்றுத்திறனாளிகளுக்கு உபகரணங்கள் அளவீடு செய்யும் சிறப்பு முகாம்.

24th May 2023 12:02 AM

ADVERTISEMENT

திருத்தணி அரசு மகளிா் மேல் நிலை பள்ளி வளாகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு உபகரணங்கள் அளவீடு செய்யும் சிறப்பு முகாமில் திரளானோா் கலந்துகொண்டனா்.

ஹப்ண்ம்ஸ்ரீா் நிறுவனம், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம், மாவட்ட ஒருங்கிணைந்த பள்ளி கல்வி இயக்கம்சி சாா்பில் எஸ். ஆா். நிதி உதவியுடன், உதவி உபகரணங்கள் தேவைப்படும் மாற்றுத்திறனாளிகளுக்கு உபகரணங்கள் அளவீடு செய்யும் சிறப்பு முகாம் நடைபெற்றது.

மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலா் சீனிவாசன் தலைமை வகித்தாா். பள்ளி பெற்றோா் ஆசிரியா் கழக தலைவா் குமரவேல், தலைமை ஆசிரியை அமுதா ஆகியோா் முன்னிலை வகித்தனா். திருத்தணி வட்டார வளமைய மேற்பாா்வையாளா் சிவகுமாா் வரவேற்றாா்.

பேட்டரியால் இயங்கும் மூன்று சக்கர வண்டி, சக்கர நாற்காலி, ஊன்றுகோல்கள், சிறப்பு சக்கர நாற்காலி, மூன்று சக்கர சைக்கிள், காலிபா், நவீன செயற்கை கால் உள்பட 14 வகையான நல உதவிகளைப் பெற கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டு, அளவீடுகள் செய்து பயனாளிகள் தோ்வு செய்யப்பட்டனா்.

ADVERTISEMENT

நிகழ்ச்சியில் மாவட்ட ஒருங்கிணைப்பாளா் தேவராஜன், வட்டார கல்வி அலுவலா் சலபதி, ஆசிரியா் பயிற்றுநா்கள் தண்டாயுதபாணி, வட்டார ஒருங்கிணைப்பாளா், இயன்முறை மருத்துவா்கள் மற்றும் சிறப்பு பயிற்றுநா்கள் பங்கேற்றனா். முகாமில் 223 மாற்றுத்திறனாளிகள் பங்கேற்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT