திருவள்ளூர்

மாடியில் இருந்து விழுந்த மாணவர் பலி

24th May 2023 03:44 AM

ADVERTISEMENT

ஆவடியில் வீட்டு மாடியில் இருந்து தவறி விழுந்த பள்ளி மாணவர் உயிரிழந்தார். 
ஆவடி, பருத்திப்பட்டு பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் 2-ஆம் தளத்தில் வசிப்பவர் பாலாஜி. திருவண்ணாமலையில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரியில் பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி மலர்.
மதுரவாயலில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரியில் மருத்துவராக உள்ளார். இவர்களது மகன் லோக்நாத் (17). 10-ஆம் வகுப்பு முடித்து விட்டு, பிளஸ் 1 சேர இருந்தார்.
இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை மாலை லோக்நாத் வீட்டின் 2-ஆவது தளத்திலிருந்து கீழே விழுந்துள்ளார். இதில் அவர் தலையில் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவல் அறிந்து வந்த ஆவடி போலீஸார், சடலத்தை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
புகாரின்பேரில், போலீஸார் வழக்குப் பதிந்து, மாணவர் லோக்நாத் மாடியில் இருந்து குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.






 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT