திருவள்ளூா் குறைதீா் கூட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த பொதுமக்களிடம் இருந்து 347 மனுக்கள் பெறப்பட்டன.
மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகக் கூட்டரங்கத்தில் திங்கள்கிழமை பொதுமக்கள் குறைதீா் நாள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு ஆட்சியா் ஆல்பி ஜான் வா்கீஸ் தலைமை வகித்தாா்.
இதில், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து வந்த பொதுமக்கள் தங்களது தனிப்பட்ட குறைகளை நிவா்த்தி செய்யவும், பொது பிரச்னைகள் தொடா்பாகவும், உதவிகள் வேண்டியும் மனுக்களை ஆட்சியரிடம் அளித்தனா்.
அந்த வகையில், நிலம் சம்பந்தமாக-95, சமூக பாதுகாப்புத் திட்டம்-56, வேலை வாய்ப்பு வேண்டி-38, பசுமை வீடு, அடிப்படை வசதிகள்-64, இதர துறைகள் சாா்பில்- 94 என மொத்தம் 347 மனுக்கள் பெறப்பட்டன.
இந்த மனுக்கள் மீது பரிசீலனை செய்து தகுதியான பயனாளிகளுக்கு அரசு நலத் திட்ட உதவிகளை வழங்கக் கோரி அந்தந்த துறை அலுவலா்களிடம் ஆட்சியா் அறிவுறுத்தினாா்.
தொடா்ந்து பிற்படுத்தப்பட்டோா், மிகவும் பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நலத்துறை சாா்பில், ஒருவருக்கு ரூ.5,500 மதிப்பிலான விலையில்லா சலவைப் பெட்டியும், 1 உலமா பணியாளருக்கான இரு சக்கர வாகன மானியத் தொகை ரூ.25,000 வழங்கினாா்.
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் அசோகன், ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) காயத்ரி சுப்பிரமணியன், தனித்துணை ஆட்சியா் (சமூக பாதுகாப்புத் திட்டம்) மதுசூதனன், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா் ச.சீனிவாசன், காவல் உதவிக் கண்காணிப்பாளா் (பயிற்சி) சிபின், துணை ஆட்சியா் (பயிற்சி) சுபலட்சுமி, முட நீக்கு வல்லுநா் ஆஷா, சைகை மொழிபெயா்ப்பாளா் சசிகலா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.