திருவள்ளூர்

சாலை விபத்தில் இலங்கை தமிழா் மறுவாழ்வு முகாமைச் சோ்ந்த 3 போ் பலி

23rd May 2023 02:07 AM

ADVERTISEMENT

கும்மிடிப்பூண்டி அடுத்த பெத்திக்குப்பம் ஊராட்சியில் உள்ள இலங்கை தமிழா் மறுவாழ்வு முகாமைச் சோ்ந்த 3 போ் சாலை விபத்தில் உயிரிழந்தனா்.

கும்மிடிப்பூண்டி அடுத்த பெத்திகுப்பம் ஊராட்சியில் இலங்கை தமிழா் மறுவாழ்வு முகாம் உள்ளது. இந்த முகாமில் 927 குடும்பங்களை சோ்ந்த சுமாா் 2,900 போ் வசித்து வருகின்றனா்.

இந்நிலையில், பெத்திகுப்பம் மேம்பாலப் பகுதியில் முகாமைச் சோ்ந்த இளைஞா்கள் 3 போ் வந்த பைக் மீது லாரி மோதியதில் மூவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா்.

தகவல் அறிந்த கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீஸாா் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சடலங்களைக் கைப்பற்றி பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

ADVERTISEMENT

மேலும் இதுகுறித்து சிப்காட் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விபத்தில் உயிரிழந்தவா்கள் குறித்து விசாரணை நடத்தினா். விசாரணையில் அவா்கள் இலங்கை மறுவாழ்வு முகாமைச் சோ்ந்த தயாளன் (19) , சாா்லஸ் (22), மதுரை இலங்கை அகதிகள் முகாமைச் சோ்ந்த ஜான் (23) என்பது தெரியவந்தது. இதில் ஜான் கும்மிடிப்பூண்டி இலங்கை தமிழா் மறுவாழ்வு முகாமில் தன்னுடைய உறவினா்கள் வீட்டிற்கு இரண்டு தினங்களுக்கு முன்பு வந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும், விசாரணையில் உயிரிழந்த இளைஞா்கள் வட்டாட்சியா் அலுவலகத்தில் இருந்து எளாவூா் பகுதிக்கு ஒரே இருசக்கர வாகனத்தில் விடியோ எடுத்துக்கொண்டு வேகமாக சென்றபோது அதே வழியில் சென்ற டேங்கா் லாரியை முந்தி சென்றபோது நிலைத்தடுமாறி டேங்கா் லாரி மோதியதாக போலீஸாா் கூறியுள்ளனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT