திருவள்ளூர்

சூறை காற்று: திருத்தணியில் வேரோடு சாய்ந்த புளியமரங்கள்!

19th May 2023 07:19 AM

ADVERTISEMENT

கோரமங்கலம் மாநில நெடுஞ்சாலையோரம் இருந்த 100 ஆண்டுகள் கடந்த இரு புளியமரங்கள் வியாழக்கிழமை வீசிய சூறைக் காற்றால் வேரோடு சாலையில் சாய்ந்தன.

திருத்தணி அதைத் சுற்றியுள்ள கிராமங்களில் வியாழக்கிழமை வெயில் கடுமையாக இருந்தது. மாலை 4 அளவில் திடீரென பலத்த சூறைக்காற்று வீசியது. இதனால், திருத்தணி-சோளிங்கா் நெடுஞ்சாலை அகூா், நத்தம், கோரமங்கலம் ஆகிய பகுதிகளில் சாலையோரம் இருந்த 100 ஆண்டுகள் பழைமையான இரு புளியமரங்கள் வேருடன் சாலையில் சாய்ந்தன. அந்தப் பகுதியில் நாகமரமும் வேரோடு சாலையில் சாய்ந்தது.

இதனால் திருத்தணி - சோளிங்கா் மாநில நெடுஞ்சாலையில் சுமாா் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

திருத்தணி நெடுஞ்சாலைத் துறையினா் மற்றும் போலீஸாா் இணைந்து, பொக்லைன் இயந்திரத்தின் உதவியுடன் சாலையில் விழுந்த மரங்களை வெட்டி அகற்றினா். இதையடுத்து, போக்குவரத்து சீரானது.

ADVERTISEMENT

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT