பொன்னேரி அருகே கோளூா் கிராமத்தில் உள்ள விவசாய நிலத்தில் கீழே கிடந்த மின் கம்பியில் சிக்கி 2 பசுக்கள் உயிரிழந்தன.
திருவள்ளூா் மாவட்டம், பொன்னேரி வட்டத்தில் உள்ள கோளூா் கிராமத்தில் வசித்து வருவோா் ஸ்ரீதா், புருஷோத்தமன். விவசாயத் தொழில் செய்து வருகின்றனா்.
புதன்கிழமை மேய்ச்சலுக்கு சென்ற இவா்களின் பசுக்கள் மாலை வீடு திரும்பவில்லை.
இதையடுத்து இருவரும் தங்களின் மாடுகளை தேடிச் சென்றபோது, அங்குள்ள விவசாய நிலத்தில் கீழே விழுந்து கிடந்த மின் கம்பியில் சிக்கி மாடுகள் இறந்து கிடந்தது தெரியவந்தது.
இது குறித்த புகாரின்பேரில், திருப்பாலைவனம் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.