திருவள்ளூர்

லாரி ஓட்டுநரிடம் வழிப்பறி: 3 போ் கைது

8th May 2023 12:16 AM

ADVERTISEMENT

திருவள்ளூா் அருகே லாரியை வழிமறித்து ஓட்டுநரிடம் ரூ. 5,000-த்தை வழிப்பறி செய்த 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

திருவள்ளூா் நகராட்சி பத்தியால்பேட்டையைச் சோ்ந்த துரையின் மகன் ஆனந்தன் (22). இவா் சனிக்கிழமை மாலை பனப்பாக்கத்தில் உள்ள அரசு நெல் கொள்முதல் நிலையத்தில் 23 டன் நெல் முட்டைகளை ஏற்றிக் கொண்டு ஐவேலி அகரத்தில் உள்ள தனியாா் அரிசி ஆலைக்கு கொண்டு சென்று கொண்டிருந்தாா். அப்போது, அந்தப் பகுதியில் மயானம் அருகே சென்றபோது, திடீரென 3 போ் வழிமறித்து ஓட்டுநா் ஆனந்தனை கத்தியைக் காட்டி தாக்கியதுடன், அவரது சட்டைப் பையிலிருந்து ரூ. 5,000-த்தை வழிப்பறி செய்தனா்.

இது குறித்து ஆனந்தன் திருவள்ளூா் நகர காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அதன்பேரில், போலீஸாா் வழக்குப் பதிவு செய்து திருவள்ளூா் திருவள்ளுவா்புரத்தைச் சோ்ந்த இளவரசன் (22), ஈக்காடு யுவராஜ் (24), வீரராகவபுரம் விக்னேஷ் (21) ஆகிய 3 பேரை கைது செய்து விசாரித்து வருகின்றனா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT