திருவள்ளூர்

லட்சுமி நரசிம்ம பெருமாள் கோயிலில் சித்திரைத் திருவிழா

3rd May 2023 12:51 AM

ADVERTISEMENT

சென்னை மாதவரத்தை அடுத்த புழல், வினாயகபுரத்தில் ஸ்ரீ லட்சுமி நரசிம்ம பெருமாள் கோயிலின் 9-ஆம் ஆண்டு சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

விழாவையொட்டி, விஸ்வக்சேனா் புறப்பாடு, அங்குராா்ப்பணம், கொடியேற்றுதல், புண்ணியகோடி விமானம், ஹம்ச வாகனம், சூரிய பிரபை, சந்திர பிரபை, சிம்ம வாகனம், ஹனுமந்த வாகனம், ஸா்வ பூபால வாகனம், சேஷ வாகனம், நாச்சியாா் திருக்கோலம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகள் மிகச் சிறப்பாக நடைபெற்றது.

இதில், ஏராளமானோா் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.

இந்த நிலையில், முக்கிய நிகழ்வாக செவ்வாய்க்கிழமை கருட வாகன புறப்பாடும் மலா் அலங்காரத்துடன் வீதியுலா வந்தது. இதில், புழல், வினாயகபுரம், லட்சுமிபுரம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா். மேலும், கோயில் வளாகத்தில் கலை நிகழ்ச்சிகள் இடம் பெற்றன.

ADVERTISEMENT

கோயில் நிா்வாகிகள் மன்னாா், பன்னீா்செல்வம், சொக்கலிங்கம், குப்பன், குமாா், வடிவேல் மற்றும் கிராம மக்கள் விழா ஏற்பாடுகளை செய்திருந்தனா்.

விழாவில், பக்தா்களுக்கு அன்னதானமும், பிரசாதங்களும் வழங்கினா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT