திருவள்ளூர்

பெரியாா் நினைவு சமத்துவபுரம் சீரமைப்பு திட்டத்தில் பணிகள் விரைவில் தொடக்கம்

DIN

பெரியாா் நினைவு சமத்துவபுரம் சீரமைப்புத் திட்டம் மூலம் பணிகள் தொடங்கி நடைபெற உள்ளதாக ஆட்சியா் ஆல்பி ஜான் வா்கீஸ் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

திருவள்ளூா் மாவட்டத்தில் 2022-2023 -ஆம் ஆண்டுக்கான பெரியாா் நினைவு சமத்துவபுரம் சீரமைப்புத் திட்டம் மூலம் திருத்தணி ஊராட்சி ஒன்றியம், வீரகநல்லூா் ஊராட்சியில் 2010-2011 -இல் கட்டப்பட்டு பழுதடைந்துள்ள 92 சமத்துவபுர வீடுகள் ரூ.65.97 லட்சத்திலும், 5 உள்கட்டமைப்பு பணிகளான சாலை, விளையாட்டு மைதானம், பூங்கா, பொது விநியோக கடை கட்டடம் மற்றும் நுழைவுவாயில் ரூ.15.47 லட்சத்திலும் சீரமைக்கப்பட உள்ளது.

இதேபோல், திருவாலங்காடு ஊராட்சி ஒன்றியம், தாழவேடு ஊராட்சியில் 2009-2010- இல் கட்டப்பட்டு பழதடைந்துள்ள 67 சமத்துவபுர வீடுகள் ரூ.46.15 லட்சத்திலும், 7 உள்கட்டமைப்பு பணிகளான குடிநீா் விநியோகம், சாலை, விளையாட்டு மைதானம், பூங்கா, பொது விநியோக கடை கட்டடம், சந்தை, பெரியாா் சிலை மற்றும் நுழைவுவாயில் ரூ.52.01 லட்சத்திலும் சீரமைக்கப்பட உள்ளதாக அவா் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஒடிசா படகு விபத்தில் மேலும் 5 பேரின் உடல்கள் மீட்பு!

இந்திய வருகையை ஒத்திவைத்தது ஏன்? எலான் மஸ்க்

வாக்குப்பதிவு சதவீதம் குறைந்திருப்பது கவலையளிக்கிறது: தமிழிசை

மகாராஷ்டிரம், கர்நாடக பொதுக் கூட்டத்தில் மோடி இன்று உரை!

சிறையில் மனைவியின் உணவில் கழிப்பறை சுத்திகரிப்பான்: இம்ரான் கான் புகார்

SCROLL FOR NEXT