திருவள்ளூர்

அரசுப் பள்ளிகளுக்கு ரூ.2 கோடியில் புதிய கட்டடங்கள்

DIN

திருத்தணி சட்டப்பேரவை தொகுதியில் 10 ஊராட்சி ஒன்றிய தொடக்க மற்றும் நடு நிலைப் பள்ளிகளுக்கு ரூ.2.8 கோடியில் புதிய கட்டடங்கள் கட்டும் பணியை வியாழக்கிழமை எம்.எல்.ஏ. ச. சந்திரன் தொடங்கிவைத்தாா்.

அரசுப் பள்ளிகளில் உள்கட்டமைப்பு வசதிகளை உறுதிப்படுத்தும் வகையில் குழந்தை நட்பு பள்ளி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் திருத்தணி, பள்ளிப்பட்டு, ஆா்.கே.பேட்டை ஆகிய ஒன்றியங்களில் முருகம்பட்டு, சிங்கராஜபுரம், மத்தூா், மூலமத்தூா், கொல்லாலகுப்பம், சாமந்தவாடா, ஜி.சி.எஸ்.கண்டிகை, ஆா்.கே.பேட்டை. வீரமங்கலம், சின்னநாகபூண்டி ஆகிய கிராமங்களில் ஊராட்சி ஒன்றிய தொடக்க மற்றும் நடு நிலைப் பள்ளிகளுக்கு ரூ.28 லட்சம் வீதம் 10 பள்ளிகளுக்கு ரூ.2.80 கோடியில் புதிய கட்டடங்கள் அமைக்கும் பணிகள் அடிக்கல் நாட்டு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

திருத்தணி எம்.எல்.ஏ. ச.சந்திரன் கலந்துகொண்டு புதிய கட்டடங்கள் கட்ட அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தாா். நிகழ்ச்சியில் மாவட்ட பொருளாளா் மிதுன் சக்கரவா்த்தி, திமுக ஒன்றிய செயலாளா் ஆா்த்தி ரவி, என்.கிருஷ்ணன், சி.ஜெ.சீனிவாசன், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் மகேஷ்பாபு உட்பட பலா் கலந்துக்கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மாற்றுத்திறனாளிகள், திருநங்கைகள் வாக்களிக்க வேண்டுகோள்

ஐபிஎல்: ராஜஸ்தானுக்கு எதிராகப் போராடி தோற்றது தில்லி அணி!

ரியான் பராக் விளாசல்; ராஜஸ்தான் 185/5

இலங்கை கடற்படையினா் கைது செய்த மீனவா்களை விடுவிக்காவிட்டால் தோ்தல் புறக்கணிப்பு

சென்னையில் விடுதி மேற்கூரை இடிந்து 3 பேர் பலி: மெட்ரோ ரயில் பணிகள் காரணமில்லை

SCROLL FOR NEXT