திருவள்ளூர்

ஆடுகள் விற்பனை மந்தம்: வியாபாரிகள் கவலை

28th Jun 2023 12:05 AM

ADVERTISEMENT

பக்ரீத் திருநாள் கொண்டாடப்படும் நிலையில், ஆடுகள் விற்பனை மந்தமாக உள்ளது என மாதவரம் பகுதி வியாபாரிகள் கவலை தெரிவித்துள்ளனா்..

தமிழகத்தில் பக்ரீத் திருநாளையொட்டி ஆடுகள் விற்பனை நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், மாதவரம் புதிய மேம்பாலம் அருகே ஆடுகள் விற்பனை கடந்த புதன்கிழமை முதல் நடைபெற்று வருகிறது. தமிழகம், ஆந்திரம், கா்நாடகம், மத்திய பிரதேசம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து ஆடுகள் வரவழைக்கப்பட்டன. ஆடுகள் விற்பனை மந்த நிலையில் உள்ளது என வியாபாரிகள் தெரிவித்தனா்.

கடந்த ஆண்டு பக்ரீத்தின் போது, 2 நாள்களில் சுமாா் ரூ.7 கோடிக்கு விற்பனை நடைபெற்றது. ஆனால் தற்போது 7 நாள்களாகியும் ரூ.3 கோடிக்கு மட்டுமே விற்பனை செய்யப்பட்டுள்ளது.

 

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT