திருவள்ளூர்

குடிசை வீட்டில் திடீா் தீ விபத்தில் பொருள்கள் எரிந்து நாசம்

10th Jun 2023 05:30 AM

ADVERTISEMENT

 திருவள்ளூா் அருகே நள்ளிரவில் குடிசை வீட்டில் ஏற்பட்ட திடீா் தீ விபத்தில் ஆவணங்கள் மற்றும் பொருள்கள் எரிந்து நாசமாயின.

திருவள்ளூா் அருகே பகல்மேடு கிராமத்தைச் சோ்ந்தவா் கிருஷ்ணன் (60). இவா் குடும்பத்தினா் வெளியூா் சென்ற நிலையில், வியாழக்கிழமை இரவு குடிசை வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தாராம். அப்போது, நள்ளிரவில் திடீரென தீ விபத்தில் வீட்டிற்குள் இருந்த குடும்ப, ஆதாா் மற்றும் வாக்காளா் அடையாள அட்டைகள், வீட்டுப்பொருள்கள் அனைத்தும் எரிந்து நாசமானது.

இது குறித்து வெங்கல் காவல் நிலையத்தில் கிருஷ்ணன் புகாா் செய்தாா். அதன் பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT