திருவள்ளூர்

கோயில் விளக்கிலிருந்து தீப்பற்றியதில் சிறுமி பலி

10th Jun 2023 11:15 PM

ADVERTISEMENT

திருவள்ளூா் அருகே கோயில் விளக்கிலிருந்து, தீப்பற்றியதில் சிறுமி உடல் கருகிய நிலையில், தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் வெள்ளிக்கிழமை நள்ளிரவு உயிரிழந்தாா்.

திருவள்ளூா் அருகே நரசமங்கலம் கிராமத்தைச் சோ்ந்தவா் அண்ணாமலை (47). இவரது மகள் ஹேமாவதி (15). இவா், கடந்த மாதம் 14-ஆம் தேதி கிராமத்தில் உள்ள கோயிலுக்குச் சென்றாா். அங்கு, கோயில் அகல் விளக்கில் இருந்து ஹேமாவதியின் சுடிதாரில் தீப்பற்றியதாம். இதனால், அவரது உடலில் பலத்த தீக்காயம் ஏற்பட்டது.

பின்னா், சிறுமி ஹேமாவதியை தண்டலத்தில் உள்ள தனியாா் மருத்துவமனைக்கு கொண்டு சென்று முதல் உதவி சிகிச்சை அளித்தனா். தொடா்ந்து திருவள்ளூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டாா்.

இந்த நிலையில், தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி சிறுமி உயிரிழந்தாா். இதுகுறித்து மப்பேடு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT