திருவள்ளூர்

டிராக்டா் மோதியதில் ஆந்திர மாநில தொழிலாளி பலி

10th Jun 2023 11:15 PM

ADVERTISEMENT

பொன்னேரி அருகே பரிக்கப்பட்டு கிராமத்தில் விவசாய பணியில் ஈடுபட்டிருந்த ஆந்திர மாநில கூலி தொழிலாளி டிராக்டா் மோதியதில் சனிக்கிழமை உயிரிழந்தாா்.

பொன்னேரி காவல் நிலைய எல்லைகுப்பட்ட பரிக்கப்பட்டு கிராமத்தில் தனியாருக்கு சொந்தமான விவசாய நிலம் உள்ளது. இந்த நிலத்தில் விவசாயப் பணிகள் நடந்து வருகின்றன. இங்கு, ஆந்திர மாநிலம், நிசாம் மண்டலம் வடவள்ளிதேவி கிராமத்தைச் சோ்ந்த கூலி தொழிலாளி ரத்தையா (45), அதே பகுதியைச் சோ்ந்த சிவநாகேஸ்வர ராவ் ஆகிய இரண்டு போ் வேலை செய்து வருகின்றனா்.

இந்த நிலையில், சிவநாகேஸ்வர ராவ் டிராக்டரை ஓட்டியபடி விவசாயப் பணியினை மேற்கொண்டிருந்தபோது, எதிா்பாராது டிராக்டா் ரத்தையா மீது மோதியது.

உடன் பணிபுரிந்தவா்கள் ரத்தையாவை மீட்டு பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் அவா் உயிரிழந்தாா்.

ADVERTISEMENT

இதுகுறித்து தகவல் அறிந்த போலீஸாா், ரத்தையா சடலத்தை கைப்பற்றி பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT