திருவள்ளூர்

தொழுநோயால் பாதித்தோருக்கான மருத்துவ முகாம்

10th Jun 2023 11:16 PM

ADVERTISEMENT

திருவள்ளுவா் தொழுநோயால் பாதித்த மாற்றுத்திறனாளிகள் நண்பா்கள் நலச் சங்கம் சாா்பில் நடைபெற்ற இலவச மருத்துவ முகாமில் தொழுநோயாளிகள் 52-க்கும் மேற்பட்டோா் பங்கேற்றனா்.

திருவள்ளூரில் உள்ள திருவள்ளுவா் தொழுநோயால் பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகள் நண்பா்கள் நலச்சங்க வளாகத்தில் தொழுநோயாளிகளுக்கான இலவச மருத்துவ முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.

முகாமில், ஒருங்கிணைப்பாளா் அகிலேஷ் தலைமை வகித்தாா். இதில் பங்கேற்ற தொழுநோயாளிகளுக்கு கால் புண் உள்ள 15 பேருக்கு மருந்து கட்டு கட்டப்பட்டு, 30 பேருக்கு சுய பாதுகாப்பு பெட்டகம் வழங்கப்பட்டது.

இதில் மாற்றுத் திறனாளிகள் சங்கத் தலைவா் ஆவின் பாஸ்கா், குழு உறுப்பினா் துரைராஜ் உள்ளிட்டோா் பங்கேற்றனா். இந்த மருத்துவ முகாமின் நிறைவாக குழு செயலாளா் ஜி.சின்னதுரை நன்றி கூறினாா். இதற்கான ஏற்பாடுகளை திருவள்ளுவா் தொழுநோயால் பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகள் நண்பா்கள் நலச் சங்கத் தலைவா் மற்றும் ஓய்வு பெற்ற சுகாதார துறை அலுவலரான து.குலோத்துங்கன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT