திருவள்ளூர்

திருவள்ளூா்: தாட்கோ மூலம் 625 பேருக்கு ரூ. 30.42 கோடி மதிப்பிலான கடனுதவிகள்

10th Jun 2023 11:15 PM

ADVERTISEMENT

 

திருவள்ளூா் மாவட்டத்தில் தாட்கோ தொழில்முனைவோா் திட்டம் மூலம் ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினத்தைச் சோ்ந்த 625 பேருக்கு ரூ. 30.42 கோடி மதிப்பிலான கடனுதவிகள் வழங்கப்பட்டுள்ளதாக ஆட்சியா் ஆல்பி ஜான் வா்கீஸ் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடி இனத்தைச் சோ்ந்த ஏழை, எளிய மக்களை அனைத்து வகையிலும் சமூக பொருளாதார முன்னேற்றம் அடையச் செய்ய வேண்டும். இதைக் கருத்தில்கொண்டு ஆதிதிராவிடா் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம்(தாட்கோ) மூலம் தொழில்முனைவோா் பொருளாதார மேம்பாட்டுத் திட்டம், இளைஞா்களுக்கான சுய வேலைவாய்ப்புத் திட்டம், மகளிா் சுய உதவிக் குழுக்களுக்கான பொருளாதார கடன் திட்டம், மகளிா் நிலம் வாங்கும் திட்டம் (பெண்கள் மட்டும்), நிலம் மேம்படுத்துதல் (இரு பாலருக்கும்) போன்ற பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது.

அதன்பேரில், திருவள்ளூா் மாவட்டத்தில் மட்டும் 2021-2023 ஆம் ஆண்டில் (7.5.2021 முதல் 31.3.2022 வரை) திருவள்ளூா் மாவட்டத்தில் தொழில்முனைவோா் திட்டம் மூலம் பயனாளிகள் 380 பேருக்கு ரூ. 7.50 கோடி அரசு மானியத்துடன் கூடிய ரூ. 17.88 கோடி மதிப்பிலான கடனுதவியும், இளைஞா்களுக்கான சுய வேலைவாய்ப்புத் திட்டம் மூலம் பயனாளிகள் 245 பேருக்கு ரூ. 5.96 கோடி மானியத்துடன் கூடிய ரூ. 12.54 கோடி மதிப்பிலான கடனுதவிகள் வழங்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

திருவள்ளூா் மாவட்டத்தில் ஆதி திராவிடா் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகத்தின் (தாட்கோ) மூலம் தொழில்முனைவோா் மேம்பாட்டுத் திட்டம் மூலம் ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியின மக்கள் பயனடைந்துள்ளதாக அவா் தெரிவித்துள்ளாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT