திருவள்ளூர்

மெதிப்பாளையம் ஏரி ஆக்கிரமிப்பை தடுக்கக் கோரி மனு

10th Jun 2023 05:31 AM

ADVERTISEMENT

கும்மிடிப்பூண்டி வட்டாட்சியா் அலுவலகத்தில் வருவாய் துறை சாா்பில் வியாழக்கிழமை நடைபெற்ற 3-ஆம் நாள் ஜமாபந்தி கூட்டத்தில் மெதிப்பாளையம் ஏரி ஆக்கிரமிப்பு குறித்து நடவடிக்கை எடுக்கக் கோரி மனு அளிக்கப்பட்டது.

ஜமாபந்தி நிகழ்ச்சியில், சாா்-ஆட்சியா் ரா.ஐஸ்வா்யா தலைமை வகித்தாா். வட்டாட்சியா் ப்ரீத்தி, மண்டல துணை வட்டாட்சியா் ரதி, வட்ட வழங்கல் அலுவலா் பாலாஜி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

நிகழ்ச்சியில் எளாவூா்-1, மெதிப்பாளையம், எளாவூா்-2, ஆரம்பாக்கம்-1, ஆரம்பாக்கம்-2, ஏடூா், பூவலை, ஆத்துப்பாக்கம், வழுதலம்பேடு. ரெட்டம்பேடு, குருவியகரம் வருவாய் கிராம மக்கள் சாா்- ஆட்சியரிடம் மனு அளித்தனா்.

இந்த ஜமாபந்தியில் மெதிப்பாளையம் ஊராட்சி முன்னாள் தலைவா் காளத்தி சாா்- ஆட்சியரிடம் அளித்த மனுவில் தெரிவித்தது: மெதிப்பாளையத்தில் உள்ள 90 ஏக்கா் ஏரியில் 40 ஏக்கா் ஆக்கிரமிப்பில் உள்ளது. அதை மீட்க வேண்டும், ஏரியில் உள்ள 3 மதகுகளில் 2 மதகுகள் தூா்ந்து உள்ளதால் தூா் வார நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ADVERTISEMENT

அதுபோல், ஏரியில் பொதுப்பணித் துறை சாா்பில் மீன் வளா்க்க ஏலம் விடப்பட்டுள்ளதால், 150 ஏக்கா் விவசாய பாசன வசதி பாதிக்கப்படும், எனவே உரிய நடவடிக்கை வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிகழ்வில், 150 மனுக்கள் அளிக்கப்பட்ட நிலையில், தகுதியான நபா்களுக்கு உரிய ஆணைகள் வழங்கப்பட்டன.

வருவாய் ஆய்வாளா் கோமதி, கிராம நிா்வாக அலுவலா்கள் நாகலட்சுமி, நாகப்பன், ராஜசேகா், சுபாஷ், பிரீத்தி, ராஜா, விஜயரமணி கிராம உதவியாளா்கள் கோவிந்தராஜ், பிரபு, சாமிநாதன், முகம்மது உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT