திருவள்ளூர்

இயல் இசை நாடக மன்றம் சார்பில் கிராமிய கலை விழா: கனிமொழி எம்.பி. பங்கேற்பு

DIN

தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம் சார்பில் 100 கலைஞர்கள் பங்கேற்ற கிராமிய கலை விழா ஆவடி அருகே அயப்பாக்கத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில், கனிமொழி எம்.பி பங்கேற்றார்.
 கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம் சார்பில், 100 கலைஞர்கள் பங்கேற்ற கிராமிய கலை விழா ஆவடி அருகே அயப்பாக்கம் முதல் நிலை ஊராட்சி, அண்ணா பசுமை பூங்காவில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. பெரும்புதூர் தொகுதி மக்களவை உறுப்பினர் டி.ஆர்.பாலு தலைமை வகித்தார். மதுரவாயல் சட்டப்பேரவை உறுப்பினர் க.கணபதி முன்னிலை வகித்தார். அயப்பாக்கம் ஊராட்சித் தலைவர் அ.ம.துரைவீரமணி வரவேற்றார். இதில், மக்களவை உறுப்பினர் கனிமொழி கலந்து கொண்டு கிராமிய கலை விழாவை தொடங்கி வைத்தார். பின்னர், அவர் பேசியது:
 சங்கத் தமிழுக்கு பிறகு, தமிழிலும் தமிழ்நாட்டிலும் மக்களைப் பற்றி பேசுவது இந்த மண் சார்ந்த கலைஞர்கள் மட்டும் தான். தமிழ் மண் சார்ந்த கலைஞர்களை மிகப்பெரிய அளவில் புரிந்து கொண்டு, கொண்டாடிய தலைவர் கருணாநிதி. தற்போது அவருடைய நூற்றாண்டு விழாவில் கிராமிய கலைஞர்களை அழைத்து மீண்டும் சமூகத்தை பற்றியும் நாட்டை பற்றியும் அக்கறையுடன் செய்திகளை கொண்டு செல்ல வேண்டும் என கிராமிய கலை விழாவை நடத்தி கொண்டிருக்கிறோம் என்றார்.
 இதைத் தொடர்ந்து, அவர் பாரம்பரிய கலைஞர்களுடன் புகைப்படம் எடுத்து கொண்டு, பசுமை பூங்காவில் மரக்கன்றுகளை நட்டார். தொடர்ந்து, அங்கு நிறுவப்பட்டிருந்த கருணாநிதியின் உருவப் படத்தை திறந்து வைத்தார்.
 தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத் தலைவர் வாகை சந்திரசேகர், உறுப்பினர்- செயலாளர் விஜயா தாயன்பன், திருவள்ளூர் மாவட்ட கூடுதல் ஆட்சியர் ஷெரிப், வில்லிவாக்கம் ஒன்றியக் குழுத் தலைவர் பா.கிரிஜா, துணைத் தலைவர் ஜெ.ஞானப்பிரகாசம், ஒன்றியக் குழு உறுப்பினர், இரா.வினோத், மாவட்டக் குழு உறுப்பினர் சு.சக்திவேல், துணைத் தலைவர் ஏ.எம்.யுவராஜா, ஊராட்சி செயலர் கோ.ஸ்ரீதர் மற்றும் வார்டு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிஎஸ்கே - குஜராத், ஆடுகளத்துக்கு அப்பால்...

தேர்தல் பிரசாரத்தில் கமல்!

படே மியன் சோட்டே மியன் டிரெயிலர் வெளியீட்டு விழா - புகைப்படங்கள்

ரியான் பராக் அதிரடி: தில்லிக்கு 186 ரன்கள் இலக்கு!

மதுபான விடுதி: மேற்கூரை இடிந்து 3 பேர் பலி!

SCROLL FOR NEXT